sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாகனங்களுக்கு பேன்சி எண் பெற ஏலம் போக்குவரத்து துறை அறிவிப்பு

/

வாகனங்களுக்கு பேன்சி எண் பெற ஏலம் போக்குவரத்து துறை அறிவிப்பு

வாகனங்களுக்கு பேன்சி எண் பெற ஏலம் போக்குவரத்து துறை அறிவிப்பு

வாகனங்களுக்கு பேன்சி எண் பெற ஏலம் போக்குவரத்து துறை அறிவிப்பு


ADDED : மே 28, 2024 03:42 AM

Google News

ADDED : மே 28, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி போக்குவரத்து துறையில் பி.ஒய்-05 எஸ் வரிசையில் பேன்சி எண்கள் பெற இன்று முதல் வரும் 3ம் தேதிவரை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி போக்குவ ரத்து துறையில் பி.ஒய்-05 எஸ் (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் இன்று (28 ம் தேதி) காலை 11.00 முதல் வரும் ஜூன் 4ம் தேதி மாலை 4.30 மணிவரை ஏலம் விடப்படுகிறது. இதில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் (யூஸ்சர் நேம்) மற்றும் கடவுச் சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் ''new public user'' கிளிக் செய்வதன் மூலமாக, இன்று முதல் வரும் ஜூன் 3ம் தேதிவரை பதிவு செய்துகொள்ளலாம்.

இதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஜூன் 4ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடக்கும் ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த இ ஆக் ஷன் முறையில் பங்கு பெற விரும்பும் பொது மக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று முதல் https://transport.py.gov.in என்ற இணைளதள முகவரியில் பார்த்தும் மற்றும் பதிவு இறக்கமும் செய்துகொள்ளலாம்.

விண்ணப்ப தொகையில் விவரம், இ.எம்.டி., யின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்மந்தமான இதர விபரங்களை போக்குரவத்து துறை அலுவலக தொலைப் பேசி எண்; 0413 2280170 Extn.236 மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஏலம் சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் onlline payment மூலம் இணைய தளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ அல்லது காசாலையோகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us