/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரக்கன்றுகள் நடும் பணி லாஸ்பேட்டையில் துவக்கம்
/
மரக்கன்றுகள் நடும் பணி லாஸ்பேட்டையில் துவக்கம்
ADDED : பிப் 15, 2025 04:58 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெஞ்சல் புயல் காரணமாக லாஸ்பேட்டை மைதானம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன. அப்பகுதியை மீண்டும் பசுமையாக்கும் முயற்சியை 'தினமலர்' நாளிதழ் துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுடன் கைகோர்த்து மரக்கன்றுகளை நட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி சார்பில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மருத்துவ கல்லுாரி தலைவர் சந்தீப் ஆனந்த், தலைமை நிர்வாக அதிகாரி அன்பு, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, செவிலியர் கல்லுாரி முதல்வர் ராஜலட்சுமி, ஆசிரியர்கள் விக்னேஷ்வரி, காயத்ரி கலந்து கொண்டனர்.
நீதிபதி குடியிருப்பு
இதேபோல் லாஸ்பேட்டை நீதிபதி குடியிருப்பு அருகில் மரக்கன்று நடும் பணியை காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜ் துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், 'மழை பொழிவிற்கும், சுத்தமான காற்றிற்கும் மரங்கள் அவசியம்.
மாநிலத்தில் பெரிய பரப்பளவில் காடுகள் இல்லாத சூழ்நிலையில் காலியாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்பினை அதிகரிக்க வேண்டும். இப்பணியில் அனைவரும் இணைய வேண்டும்' என்றார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.