/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் ஓட்டளிக்க முடிவு
/
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் ஓட்டளிக்க முடிவு
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் ஓட்டளிக்க முடிவு
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் ஓட்டளிக்க முடிவு
ADDED : ஏப் 09, 2024 04:52 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்த பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர், ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 5ம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், வரும் 19ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தோம். கடந்த 6ம் தேதி தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையத்தில், கூட்டம் நடந்தது. அதில், மாநில தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த நாங்கள், தேர்தலில் ஓட்டளிக்க போவதாக முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.