ADDED : ஆக 06, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: டில்லி, தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய ராணுவ தலைமையகத்தின் ஒப்புதலுடன் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி நலச்சங்கத்தின் தலைவர் மோகன் தேசிய நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, போரில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வமணி, செயலாளரும், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்புச் செயலாளருமான தொம்னிக் ஆகியோர் உடனிருந்தனர்.
