/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
/
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
ADDED : மே 09, 2024 04:30 AM

புதுச்சேரி : பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலக போரில் உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில், போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலப்போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் வகையில், 79ம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி, புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள போர்வீரர் நினைவு இடத்தில், நேற்று மாலை 5:00 மணியளவில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலையில், பிரெஞ்சு துணை துாதர் ஜீன் பிலிப் ஹூதர் தலைமையில், போலீசாரின் வாத்தியங்கள் முழங்க, மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், பிரெஞ்சு துாதரக அதிகாரிகள், முன்னாள் படைவீரர்களின் சங்க உறுப்பினர்கள், பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.