ADDED : ஜூலை 06, 2026 10:10 PM
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், பெற்றோர்களுக்கு பரிசு வழங்குதல் என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் லிங்கசாமி தலைமை தாங்கினார். பள்ளி தமிழாசிரியர் சத்தியவாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், நுாறு சதவீதம் வெற்றி கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ஜெயப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினார்.
