ADDED : ஜூலை 06, 2026 10:10 PM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த மூன்று நபர்கள் நேற்று முன்தினம் சைபர் கிரைம் கும்பலிடம் 23 ஆயிரத்து, 392 ஏமாந்துள்ளனர்.
வில்லியனுார் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் ஆன்லைனில் மூலம் குழந்தைகள் ஆடைகளை 5 ஆயிரத்து 350 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவை டெலிவரி செய்யவில்லை. தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். அதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய தனது போன்பே மூலம் பணம் அனுப்பி ஏமாந்தார்.
முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து 17 ஆயிரத்து 643 ரூபாய்க்கு குர்த்தி உள்ளிட்ட ஆடைகள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார்களின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
