/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பு கட்டையில் லாரி மோதல்: புதிய சிக்னல் கம்பம் முறிந்தது
/
தடுப்பு கட்டையில் லாரி மோதல்: புதிய சிக்னல் கம்பம் முறிந்தது
தடுப்பு கட்டையில் லாரி மோதல்: புதிய சிக்னல் கம்பம் முறிந்தது
தடுப்பு கட்டையில் லாரி மோதல்: புதிய சிக்னல் கம்பம் முறிந்தது
ADDED : ஜூலை 11, 2024 06:29 AM

புதுச்சேரி,: முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தில் டிப்பர் லாரி சென்டர் மீடியன் மீது மோதியதால், புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது.
புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி, நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு, டிப்பர் லாரி (டி.என்.18.பி.எப்.6145) அளவுக்கு அதிகமான எம்-சாண்ட் ஏற்றிக் கொண்டு சென்றது.
முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது, சாலைநடுவில் இருந்த சென்டர் மீடியன் மீது லாரி பயங்கரமாக மோதியது.
இதில், லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்ததுடன்,புதிதாக அமைக்கப்பட்ட டிராபிக் சிக்னல் கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது.
போக்குவரத்து குறைவாக இருந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
இந்த சிக்னல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.விபத்து ஏற்படுத்திய லாரியும், சிக்னல் கம்பம் அமைத்த நிறுவனமும் சமரசமாக சென்று விட்டதால் வழக்கு பதியவில்லை என, போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.