ADDED : மார் 05, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால: இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
காரைக்கால் திருப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு டி.என்.29.ஏ.ஆர்.2541 பதிவெண் கொண்ட லாரி இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது. காமராஜர் சாலை சந்திப்பில் திரும்பியபோது, எதிரில் வந்த டி.என்.34.எம்.சி. 2300 பதிவெண் கொண்ட டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதியது. இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் திருவாரூர் சத்தியசீலன், 38; காயங்களுடன் லாரியில் சிக்கி கொண்டார். தீயணைப்பு வீரர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.