ADDED : மார் 11, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொது இடத்தில் அவதுாறாக பேசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் நின்றிருந்த வாலிபர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சம்பவ இடத்திற்கு சென்று, அவதுாறாக பேசிய ஐயங்குட்டிபாளையம் ஜவகர்ராஜ், 18, கைது செய்தார். அதே போல, தவளக்குப்பம், கடலுார் சாலையில் தனியார் மதுபான பார் அருகே பொதுமக்களை அவதுாறாக பேசிய, பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 36; என்பவரை, தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.