ADDED : செப் 15, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண்களை கேலி செய்த இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானுார் காந்திவீதியச் சேர்ந்த ஈஸ்வரன் 24, ஹரிஷ் 24, இருவரும், நேற்று முன்தினம் மாலை சேதாரப்பட்டு பிப்படிக் பகுதியில் நின்று கொண்டு கம்பெனியில் இருந்து வெளிவரும் பெண்களை பார்த்து ஆபாசமாக பேசியும், கேலி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சேதாரப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர் களை எச்சரித்து அனுப் பினர்.
இருப்பினும் தொடர்ந்து அவர்கள் பெண்களை கேலி செய்து கொண்டிருந்ததால், இருவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.