ADDED : மார் 30, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் கனகன் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. மேலும் அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்த தினேஷ், 30; உழவர்கரையை சேர்ந்த சரண்குமார், 21; எனத் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து. ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 120 கிராம் கஞ்சா மற்றும் பைக், மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

