ADDED : ஏப் 28, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பு.முட்லுாரில் சந்தேகிக்கும் வகையி்ல நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், பு. முட்லுார் காந்தி நகர் ரத்தினவேல் மகன் முத்துவேல், 20; பரங்கிப்பேட்டை சேகர் மகன் விஜய், 22, என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

