ADDED : மே 26, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது மதுகுடித்து விட்டு வில்லியனுார் மாட வீதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்ட அரசரமரத்து வீதியைச் சேர்ந்த சாந்தலிங்கம், 59, என்பவரை போலீசார் கைது செய்தார்.
இதேபோல், பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட மூலகுளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் 23, என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.