ADDED : ஜூன் 13, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சின்ன காலப்பட்டு விளையாட்டு திடல் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்ட சாமிபிள்ளைத்தோட்டம் வாஞ்சிநாதன் நகர் அனந்த், 36; பிள்ளைச்சாவடி நடுத்தெரு அய்யனார், 30; ஆகியோரை கைது செய்தனர்.