ADDED : பிப் 15, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, சோரியாங்குப்பம், வி.ஐ.பி., நகர் சாலையில் இரண்டு பேர் ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் அடுத்த திருமாணிக்குழி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42, கடலுாரை சேர்ந்த சீனிவாசன், 40, என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.