/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ மீது கார் மோதல் பள்ளி சிறுமிகள் இருவர் காயம்
/
ஆட்டோ மீது கார் மோதல் பள்ளி சிறுமிகள் இருவர் காயம்
ஆட்டோ மீது கார் மோதல் பள்ளி சிறுமிகள் இருவர் காயம்
ஆட்டோ மீது கார் மோதல் பள்ளி சிறுமிகள் இருவர் காயம்
ADDED : ஆக 20, 2024 05:17 AM
புதுச்சேரி: கவர்னர் மாளிகை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ கவிழுந்து 2 பள்ளி சிறுமிகள் காயமடைந்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 5க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று புறப்பட்டது. கவர்னர் மாளிகை அருகில் உள்ள பிரான்சுவா மார்த்தேன் வீதி வழியாக வந்தது. காலை 8:00 மணிக்கு, ஆட்டோ பின்னால் வந்த வேன்ஆர் கார், ரங்கப்பிள்ளை வீதிசந்திப்பு அருகே வந்தபோது ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
ஆட்டோவில் இருந்த சிறுமிகளை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமுற்ற 11 வயது சிறுமி சுஜி, உட்பட 2 சிறுமிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 சிறுமிகள் காயம் ஏதும் இன்றி தப்பினர்.
விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.