/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களிடம் தகராறு இரு வாலிபர்கள் கைது
/
பொதுமக்களிடம் தகராறு இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 09, 2024 03:48 AM
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பண்டசோழநல்லுார் 3வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் 24, பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தார்.
இதேபோல், ஏரிப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் பொது மக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயன் 27, என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.