தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 


ADDED : மே 20, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 39ம் ஆண்டு சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

இதையொட்டி, கடந்த 17ம் தேதி நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் (18 ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு மின் அலங்காரத்தில் மஞ்சள் நீர் வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக, நேற்று இரவு 8:00 மணிக்கு நாகாத்தம்மன் சிறப்பு அலங் காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us