/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணைவேந்தர் இல்லம் முற்றுகை பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்ப்பு
/
துணைவேந்தர் இல்லம் முற்றுகை பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்ப்பு
துணைவேந்தர் இல்லம் முற்றுகை பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்ப்பு
துணைவேந்தர் இல்லம் முற்றுகை பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்ப்பு
ADDED : மார் 13, 2025 06:30 AM
புதுச்சேரி: பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொருட்களை கொண்டு செல்ல, ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, துணை வேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வந்த குர்மீத் சிங், பதவி காலம் கடந்த 2023 டிச. 23ம் தேதியுடன் முடிவடைந்தது. அதையடுத்து துணைவேந்தர் பொறுப்பினை மூத்த அதிகாரியான பல்கலைக்கழக ஆய்வு பிரிவு இயக்குநர் தரணிக்கரசு கவனித்து வந்தார்.
புதிய துணைவேந்தராக ைஹதராபாத் பல்கலைக் கழக சீனியர் பேராசிரியர் பானிதி பிரகாஷ்பாபுவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, புதிய துணை வேந்தருக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் துணைவேந்தர் குர்மீத் சிங், இல்லத்தை காலி செய்து பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று துணை வேந்தர் இல்லத்திற்கு வந்திருந்தார். இதற்கு, பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, துணை வேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன.
இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில், துணை வேந்தர் பதவிக்காலம் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. இருப்பினும், 6 மாதங்கள் வரை துணைவேந்தர் இல்லத்தில் தங்குவதற்கு சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால், அதனை தாண்டி இல்லத்தில் தங்கி இருந்ததால், முறைபடி அரசுக்கு வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை வாடகை கட்டணம் ஏதுவும் செலுத்தவில்லை. அவசர, அவரசமாக பொருட்களை எடுத்து செல்வதற்கான அவசியம் என்ன.
இதற்கிடையே, குர்மீத் சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.