ADDED : ஆக 10, 2026 07:52 PM
காரைக்கால்: காரைக்காலில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் கூலித் தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
காரைக்கால், கோட்டுச்சேரி கீழக்காசாகுடி ஆர்.ஆர்.,நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் சண்முகம், 52; கூலி தொழிலாளி. வெளியூரில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வெளியூரிலிருந்து ஊருக்கு வந்த சண்முகம் தனது தாயிடம் மனவருத்தத்துடன் எனக்கு வாழவே பிடிக்கவில்லை என, கூறியுள்ளார். தாய் அவரை சமதானம் செய்தார். பின், வெளியில் சென்ற சண்முகம் வேகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, வீட்டின் பின்பக்கம் உள்ள புளியமரத்தில் சண்முகம் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
