தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்


ADDED : ஆக 10, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி., பள்ளியில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான துவக்க விழா நடைபெற்றது.

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, 1 முதல் 19 வயது வரையுள்ளோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதையொட்டி, 3,03,244 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான துவக்க விழா, புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது. சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கி, துவக்கி வைத்தார். துணை இயக்குனர்கள் உமா சங்கர் (பொது சுகாதாரம்), ரொசாரியோ (குடும்ப நலம் மற்றும் தாய்சேய் நலத்துறை), தடுப்பூசி பிரிவு டாக்டர் சித்ரா, மதிய உணவு திட்ட அதிகாரி கொஞ்சுமொழி குமரன், குழந்தைகள் நல தலைமை டாக்டர் அனுராதா, டாக்டர்கள் ரமா, ஜமுனா, ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ரோஷினி, துணை முதல்வர் சிவராமன் உட்பட துணை செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், 1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் மூலமாகவும், 3 மதல் 19 வயது வரையுள்ளோருக்கு அவர்கள் பயிலும் பள்ளி மூலமாகவும், சுகாதார உதவியாளர், பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகளுக்கு ஆஷா பணியாளர்கள் மூலம் வீட்டிற்கே சென்று மாத்திரை வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us