தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கரைக்காலில் பூக்கடை ஊழியருக்கு ‘போக்சோ’ வழக்கில் 20 ஆண்டு சிறை

கரைக்காலில் பூக்கடை ஊழியருக்கு ‘போக்சோ’ வழக்கில் 20 ஆண்டு சிறை

கரைக்காலில் பூக்கடை ஊழியருக்கு ‘போக்சோ’ வழக்கில் 20 ஆண்டு சிறை


ADDED : ஆக 10, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் போக்சோ வழக்கில் பூக்கடை ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால் காரைக்கால் டி.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் முரளி, 23; இவர் அப்பகுதியில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2022ம் ஆண்டு பிப்., 13ம் தேதி 16 வயது பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் நெருங்கி பழகினார்.

இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, முரளியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி முரளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us