தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர்' - சத்யா நடத்திய கண்காட்சியில் புதிய 'விவோ எஸ்2' மொபைல் அறிமுகம்

'தினமலர்' - சத்யா நடத்திய கண்காட்சியில் புதிய 'விவோ எஸ்2' மொபைல் அறிமுகம்

'தினமலர்' - சத்யா நடத்திய கண்காட்சியில் புதிய 'விவோ எஸ்2' மொபைல் அறிமுகம்


UPDATED : ஆக 10, 2026 08:45 PM

ADDED : ஆக 10, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 08:45 PM ADDED : ஆக 10, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தினமலர் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்திய கண்காட்சியில் புதிய 'விவோ எஸ் 2' மொபைலை நடிகை ஸ்வாதி அறிமுகம் செய்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து மெகா வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் இறுதி நாளான நேற்று, புதிய தலைமுறை ஸ்மார்ட் போனான 'விவோ எஸ்2' மொபைல் போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விற்பனையும் துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை ஸ்வாதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய 'விவோ எஸ் 2' மொபைல் போனை அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி சத்யா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியின் இறுதி நாளில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்ற நிலையில், புதிய 'விவோ எஸ் 2' மொபைல் போன் அறிமுக நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us