ADDED : ஏப் 24, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சுவீட் கடையில் வேலை செய்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரபிரதேச மாநிலம் அட்டினா பகுதியை சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ், 27; இவர், வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள சுவீட் கடையில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும், இவர், சொந்த ஊரில் கடன் வாங்கியது தொடர்பாக, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, மனஉளைச்சலில் இருந்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 22 ம் தேதி வேல்ராம்பட்டில் தங்கியிருந்த அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

