/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டவிரோத படகுகளை வெளியேற்ற வலியுறுத்தல்
/
சட்டவிரோத படகுகளை வெளியேற்ற வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2025 04:17 AM
புதுச்சேரி : துறைமுகத்தில் சட்டவிரோதமாக நிறுத்தியுள்ள வெளிமாநில படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், துறைமுக வளாகத்தில் நடந்தது. சம்மேளன தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலர் ஜவகர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
சங்க தலைவராக துளசிங்கம், துணை தலைவராக புகழேந்தி, செயலாளராக அன்பழகன், இணை செயலாளர் ஏசுநாதர், பொருளாளர் ரவி, செயற்குழு உறுப்பினர்களாக மரகதவேல், ஜீவானந்தம், சிவலிங்கம், குமரன், தேசப்பன் தேர்வு செய்யப்பட்டனர்.
துறைமுக காலி பணியிடங்களை, பதவி உயர்வு, புதிய பணி நியமனம் செய்து நிரப்ப வேண்டும், துறைமுக வளாகத்தில் குடியிருப்பு, புதிய அலுவலகம் கட்டி தர வேண்டும், துறைக்கு சொந்தமான கப்பலை துறைமுக பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்டு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகத்தை துார்வாரி ஆழப்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும், துறைமுகத்துறைக்கு சொந்தமான இடங்களை தனியாருக்க தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும், துறைமுகத்தில் சட்டவிரோதமாக நிறுத்தியுள்ள வெளிமாநில படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.