நேரடி விமானங்கள் இல்லாததால் ஊர் ஊராய் சுற்றும் பயணியர்; டிக்கெட் கட்டணமும் ஏறியதால் அதிர்ச்சி
நேரடி விமானங்கள் இல்லாததால் ஊர் ஊராய் சுற்றும் பயணியர்; டிக்கெட் கட்டணமும் ஏறியதால் அதிர்ச்சி
ADDED : டிச 24, 2025 06:18 AM

சென்னை: பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பல நகரங்களுக்கு நேரடி விமானம் கிடைக்காததால், பயணியர் தவித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அடுத்தடுத்து வருவதால், பள்ளி கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், விமான நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து, தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்ல, நேரடி விமானங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக திருச்சி, கோவை, மதுரை செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு பயணியர் தள்ளப்பட்டுள்ளனர். விமான நிறுவனங்களும், இதை காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்திஉள்ளன.
குறிப்பாக, சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்லும் அனைத்து விமானங்களில் நேற்றும், இன்றும் இருக்கைகள் நிரம்பி விட்டன. அதனால், துாத்துக்குடி செல்ல, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணமும் அதிகரித்து, பயண நேரமும் கூடுதலாகி உள்ளது.
மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களில், அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டதால், பயணியர் சென்னையி ல் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


