நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மொளப்பாக்கம் பொறையாத்தம்மன் கோவிலில் கோகுலாஷ்டமியொட்டி உறியடி உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பொறையாத்தம்மன் கோவிலில், கோகுலாஷ்டமியொட்டி உறியடி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், அபி ேஷக ஆராதனைகளும், இரவு 7.00 மணிக்கு மொளப்பாக்கம் மந்தைவெளி திடல் பகுதியில் உறியடி உற்சவம் நடந்தது. விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.