/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உருளையன்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீஸ் தீவிர விசாரணை
/
உருளையன்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீஸ் தீவிர விசாரணை
உருளையன்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீஸ் தீவிர விசாரணை
உருளையன்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீஸ் தீவிர விசாரணை
ADDED : மே 27, 2024 05:10 AM
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள வாலிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பெரியார் நகர் 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ருத்ரேஷ், 27; பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி, பெரியார் நகர் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் எதிரில் நின்றிருந்த ருத்ரேஷ்சை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, உருளையன்பேட்டை, 4வது குறுக்கு தெரு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த ஈஸ்வர், 23; 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கவுதம், 24; அரவிந்த், 22; எழில், 24; உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் உள்ள எழிலின் வீடு, உருளையன்பேட்டை, முருகன் கோவில் தெரு, 4வது குறுக்கு தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், எழில் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசினர்.
அந்த குண்டு வெடித்து தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ருத்ரேஷின் நண்பர்கள் யாரேனும், எழிலை பழிவாங்கும் நோக்கில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

