/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரசாயன தொழிற்சாலைகளால் அழிவு பாதையில் செல்லும் ஊசுடு தொகுதி
/
ரசாயன தொழிற்சாலைகளால் அழிவு பாதையில் செல்லும் ஊசுடு தொகுதி
ரசாயன தொழிற்சாலைகளால் அழிவு பாதையில் செல்லும் ஊசுடு தொகுதி
ரசாயன தொழிற்சாலைகளால் அழிவு பாதையில் செல்லும் ஊசுடு தொகுதி
ADDED : ஏப் 10, 2024 03:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, ஊசுடு தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
ஊசுடு தொகுதியில், ஆட்சியாளர்கள் திட்டமிட்டு ரசாயன தொழிற்சாலைகளை கொண்டு வந்து அழிவுபாதைக்கு கொண்டு செல்கின்றனர். தொகுதி நிலத்தடி நீரை உறிஞ்சும் ஸ்டீல்,சிலிக்கான் தொழிற்சாலைகளால் நிரம்பி உள்ளது.தற்போது புதிதாக தி.மு.க., பிரமுகருக்கு மதுபான தொழிற்சாலை அனுமதி வழங்கி உள்ளனர்.இதன் மூலம் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சுப்படுகிறது. சுற்றுச்சூழல் மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு வந்து விட்டதை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை.
கடந்த 10 ஆண்டிற்கு முன்பு கரசூர், தொண்டமாநத்தம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தினர். அத்திட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றால், உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை இந்த அரசு மதிக்கவில்லை.
கொள்கையற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.
வைத்திலிங்கம், அடித்தட்டு, வறுமை கோட்டிற்கு கிழ் வாழும் மக்களை மதிக்க தெரியாத நபர். 5 ஆண்டு கால எம்.பி.யாக இருந்து தனது சொந்த வாழ்க்கையை வளமாக்கி கொண்டவர்.எனவே தமிழ்வேந்தனை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

