/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை பா.ஜ., மகளிர் தின விழா
/
உழவர்கரை பா.ஜ., மகளிர் தின விழா
ADDED : மார் 08, 2025 04:14 AM

புதுச்சேரி : உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
வட்ட தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். தேசிய மகளிரணி செயற்குழு உறுப்பினர் தாமரைசெல்வி முன்னிலை வகித்தார்.
தன்வந்திரி நகர், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் மற்றும் கோரிமோடு, மேட்டுபாளையம் ஆரம்ப சுகாதார மருத்துமனைகளில் பணிபுரியும் பெண் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில விவசாய அணி செயலாளர் முத்து, மகளிர் அணி செயலாளர் கலைவாணி, திருநீலக்கண்டன், தேவா, பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் கார்த்திக், தட்டாஞ்சாவடி தொகுதி முன்னாள் செயலாளர் குமார், ரவி, கலையரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.