/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடிகளில் காலி பணியிடங்கள் நி ரப்பப்படும்: தேனீ ஜெயக்குமார்
/
அங்கன்வாடிகளில் காலி பணியிடங்கள் நி ரப்பப்படும்: தேனீ ஜெயக்குமார்
அங்கன்வாடிகளில் காலி பணியிடங்கள் நி ரப்பப்படும்: தேனீ ஜெயக்குமார்
அங்கன்வாடிகளில் காலி பணியிடங்கள் நி ரப்பப்படும்: தேனீ ஜெயக்குமார்
ADDED : ஆக 13, 2024 05:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் திருநங்கைகள் நல வாரியம், பெண் பயணிகள் தங்கும் விடுதி, அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள் நிரப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார்தெரிவித்தார்.
இது குறித்து அவர் சட்டசபையில் கூறியதாவது:
புதுச்சேரியில் திருநங்கைகள் நலவாரியம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடையாள அட்டைகள் வழங்கி தொழில் கடன், தொழிற்பயிற்சிகள் வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் கட்டமாக ரூ. 5 கோடி செலவில் பழுதடைந்த நிலையில் உள்ள 100 அங்கன்வாடி மையங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அங்கன்வாடி மையங்களில் விளையாட்டு மற்றும் அடிப்படைக் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்.
அனைத்து அங்கன்வடி மையங்களுக்கும் காஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும்.
பயணம் மேற்கொள்ளும் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பஸ் நிலையம், ரயில் நிலையம் அருகில் இலவச பெண்கள் தங்கும் விடுதி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் 416 குழந்தைகள் ஒரு பெற்றோரை இழந்துள்ளனர்.
அரசு பள்ளியில் பயிலும் அத்தகைய குழந்தைகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 4 ஆயிரம் வழங்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. ஓய்வூதியதார்களுக்கு ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி ரூ. 15 ஆயிரம், ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

