/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'வி.ஏ.ஓ., உதவியாளர் பணியிடம் நிரப்பப்படும்'
/
'வி.ஏ.ஓ., உதவியாளர் பணியிடம் நிரப்பப்படும்'
ADDED : ஆக 15, 2024 05:04 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்விநேரத்தில் நடந்த விவாதம்:
நாகதியாகராஜன் (தி.மு.க.,): வருவாயத்துறையில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: நிர்வாக அதிகரி-42, உதவியாளர் -83 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப பரிசீலனை செய்யப்படும்.
நாஜிம்(தி.மு.க.,): காரைக்கால் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக கிராம நிர்வாக அதிகாரி இல்லை. இதனால் மாணவர்கள் சான்றிதழ் பெறுவதில் துவங்கி,பல்வேறு பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பதவிகளை நிரப்ப வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.
நாகதியாராஜன்: பல துறைகளை கணினி மயமாக்கி வருகிறோம். சான்றிதழ் வழங்குவதில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த அலுவலகங்கள் இன்னும் கணினிமயமாக்கப்படவில்லை. அவர்களுக்கு லேப்டாப் கொடுக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோப்பு அனுப்பப்பட்டது. அதில் சில பிரச்னைகள் உள்ளது. அவற்றை தீர்த்து விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதற்கு ஏற்ப துறைகளை நவீனப்படுத்தி வருகிறோம். கிராம நிர்வாக அலுவலகங்களும் நவீனப்படுத்தப்படும்.அவர்களுக்கு தேவையான லேப்டாப், வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.