/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை

ADDED : ஆக 02, 2024 01:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் லோக்சபாவில் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் மின் துறையின் மூலம், மிகவும் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய அரசு புதுச்சேரியில் மின் வினியோகம் மற்றும் பராமரித்தலை தனியார் வசமாக்க உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை, அரசு சார்பு மின் நிறுவனமோ அல்லது மின்வாரியமோ, மின் உற்பத்தியோ கிடையாது.
அதற்கு பதிலாக அரசே நேரடியாக மின் விநியோகத்தை கவனித்து வருகிறது. மேலும் புதுச்சேரியில் மின் உற்பத்தி எதுவும் செய்யப்படவில்லை. மின் வினியோகமும், பராமரித்தலும் குறைவான மின் இழப்புடன் புதுச்சேரி மின் துறையால் லாபகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மின்துறையின் சொத்து மதிப்பும் மிகவும் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படும் செயல் நியாயமானது அல்ல. புதுச்சேரி மக்களும் மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது மக்களின் எண்ணம் மிகத் தெளிவாக தெரிய வந்தது. அதனால், மத்திய அரசு, புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.