/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோல்விக்கு பொறுப்பேற்று வைத்திலிங்கம் ராஜினாமா
/
தோல்விக்கு பொறுப்பேற்று வைத்திலிங்கம் ராஜினாமா
ADDED : மே 07, 2026 08:11 PM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் பெரும் இழுபறியும், குழப்பமும் ஏற்பட்டது. இது, தேர்தல் களத்தில் ஓட்டுகளை சிதறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 21 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்திய காங்கிரசால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதற்கிடையில் வைத்திலிங்கம் எம்.பி., கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் தோல்விக்கு முழு தார்மீகப் பொறுப்பேற்று, எனது மாநிலத் தலைவர் பதவியைத் துறக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

