/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் யோகா மையம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வள்ளலார் யோகா மையம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 20, 2024 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உலக யோகா தினத்தையொட்டி வள்ளலார் யோகா மையம் சார்பில், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக யோகா தினத்தையொட்டி, முதலியார்பேட்டை வள்ளலார் யோகா மையம் சார்பில், கடற்கரை காந்தி சிலை அருகே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், யோகா செய்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், மனோ பலம், வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், மையத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.