ADDED : ஜூலை 04, 2024 03:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி வண்ணார் சமுதாய முன்னேற்ற மத்திய கூட்டமைப்பு செயல் விளக்க கூட்டம் நடந்தது.
புதுச்சேரி வெங்கட்டா நகர், புதுவை தமிழ் சங்கத்தில் நடந்த கூட்டத்தில், தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பிரபுராமன், பெருமாள் செயலாளர் சிவகுமார், துணை செயலாளர்கள் சீத்தாராமன், சரவணன், பொருளாளர் சரவணன் ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு, வண்ணார் குல ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிரகாஷ் தலைவர், தமிழ்ச்செல்வன், பஞ்சாட்சரம், ரமேஷ்பாபு, இசக்கிதுரை, ராஜ மாணிக்கம் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 254 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், முனியாண்டி, தனகொடி உட்பட பலர் பங்கேற்றனர்.