/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதன் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
/
வரதன் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஏப் 26, 2024 11:53 PM

புதுச்சேரி : பிள்ளைசாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில், அகிரா மியாவாக்கி காடுகள் தொடக்க விழா, பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மற்றும் விளையாட்டுப்போட்டி, என முப்பெரும் விழா நடந்தது.
பொறுப்பாசிரியர் செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார். தலைமை ஆசிரியை திலகவதி பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில் பள்ளியின் முன்னேற்றம் மற்றும் பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு குறித்து பேசினார்.
செம்பேப் ஆல்கலிஸ் நிறுவனம், அன்னபிரதோஷனா அறக்கட்டளை இணைந்து, அகிரா மியாவாக்கி காடுகள் திட்டத்தை தொடங்கி வைத்தன. அறக்கட்டளை இயக்குநர் பிரவீன் குமார், அகிரா மியாவாக்கி காடுகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிார். ஆசிரியர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
இதில், 200க்கும் மேற்பட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை, செம்பேப் நிறுவன மனிதவள மேலாளர் கண்ணப்பன், கட்டட பொறியாளர் இளங்கோ மற்றும் பள்ளி மாணவர்கள் நட்டனர். இதையடுத்து, மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இறுதியில் ஆசிரியர் சசிகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

