
புதுச்சேரி: திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த ரதோற்சவ விழாவையொட்டி, தீமிதி விழா நடந்தது.
புதுச்சேரி, ஈஸ்வரன் கோவிலில் தெருவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி வசந்த ரதோற்சவ விழா, பாரதிபுரம் கோவிந்தசாலையில் உள்ள வன்னியர்குல மரபினர்களால் நடத்தப்படுகிறது. நேற்று மதியம் அம்மனுக்கு அபிேஷக மற்றும் சிறப்பு பூஜை நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து புஷ்ப அலங்காரத்துடன் தேர் புறப்பட்டு, முத்தியால்பேட்டை அடுத்த கருவடிகுப்பம் வெள்ளவாரியில் நடந்த தீமிதி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை வன்னியர்குல மரபினர்களின் கவுர தலைவர் நேரு எம்.எல்.ஏ., துணை தலைவர் ஆனந்தகுமார், தலைவர் வாசு, செயலாளர் இளங்கோ, பொருளாளர் உதயகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இந்த தீமிதி நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று இரவு 10:00 மணிக்கு பாரதிபுரம் கோவிந்தசாலை வழியாக அம்மன் தேர் பவனி நடக்கிறது.

