ADDED : மார் 06, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கடந்த 2022--2023ம் பட்ஜெட்டில் எஸ்.சி.,எஸ்.டி., மக்கள் நலத்திட்டம் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட வருமான உச்சவரம்பை ரூ. 8 லட்சமாக உயர்த்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் பாட்கோ மூலம் பெறப்பட்ட கல்விக் கடன் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி., மாநில முதன்மை செயலர் பொழிலன் தலைமை தாங்கினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.