ADDED : மார் 09, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, புதுச்சேரி காவல் துறை சார்பில், வீரமங்கை இருசக்கர வாகன ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது.
ஊர்வலத்தை கவர்னரின் மனைவி பீனா, டி.ஜி.பி., ஷாலினி சிங் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் அனிதா ராய், கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி உட்பட பலர் பங்கேற்றனர்.
பெண் காவலர்கள், எஸ்.ஐ.,கள், கல்லூரி மாணவிகள், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், பழைய துறைமுகத்தில் முடிவடைந்தது.