ADDED : செப் 18, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரியில் சதம் அடித்த வெயிலால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கோடை காலமான மார்ச், ஏப்., மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதம் துவங்கியது முதல் சில நாட்கள் மழை பெய்ததால், வெப்பம் சற்று தணிந்தது. வெயில் குறைந்தது என மக்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரிக்க துவங்கியது. இதனால் சுற்றுலா தளங்களில் பகல் நேரங்களில் மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலை நேரத்தில் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம், பேரடைஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று புதுச்சேரியில் வெப்ப நிலை 101.8 டிகிரி பதிவானது. இதனால் முதியோர்கள், பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் முடங்கி, அவதிப்பட்டனர்.

