தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெங்கடேஸ்வரா கல்லுாரிகள் பட்டமளிப்பு விழா 

வெங்கடேஸ்வரா கல்லுாரிகள் பட்டமளிப்பு விழா 

வெங்கடேஸ்வரா கல்லுாரிகள் பட்டமளிப்பு விழா 


ADDED : ஜூலை 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் இந்திராணி செவிலியர் கல்லுாரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிசியோதெரபி மற்றும் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் அறிவியல் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

டாக்டர் ஜமுனா ராணி,  இந்திராணி ஆகியோர் வரவேற்றனர். கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி நிறுவனர் ராதா, முதன்மை இயக்க அதிகாரி வித்யா பொதுமேலாளர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், அன்னை தெரசா முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதல்வர்  திருமுருகன் பங்கேற்று பேசினர்.

எஸ்.வி.ஜி.ஐ., நிறுவன தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார். செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் இந்திராணி, செவிலியர் கல்லுாரி முதல்வர் மல்லிகா, வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஆனந்த் வைரரேல்,  வெங்கடேஸ்வரர பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்து, கல்வி ஆண்டு முழுதும் மாணவர்கள் செய்து சாதனைகள் குறித்து பேசினர்.

இதில், 200க்கும் மேற்பட்ட பல்வேறு துறை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பரணிதரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us