பிளஸ் 2 மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டாம்
பிளஸ் 2 மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டாம்
ADDED : ஜூலை 17, 2026 07:12 PM
புதுச்சேரி: பிளஸ் 2 மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டாம் என, தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிளஸ் 2 ஸ்டேட் போர்டு மாணவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்ய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, இந்த கல்வியாண்டு 2025–26 பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விபரங்கள், பள்ளி கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு, வேலைவாய்ப்பகத்தில், தேசி தகவல் தொழில்நுட்ப மையம் உதவியுடன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பதிவிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். மேலும் பிளஸ் 2 கல்வித் தகுதி பதிவு செய்யப்பட்ட புதிய வேலை வாய்ப்பு அடையாள அட்டையை அசல் மதிப்பெண் சான்றிதழ் வந்த 15 நாட்கள் பிறகு இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுவரை வேலைவாய்ப்பகத்தில், பதிவு செய்யாத மாணவர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சம்மந்தபட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
