தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் ஆப்பில் 10ம் வகுப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

மொபைல் ஆப்பில் 10ம் வகுப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

மொபைல் ஆப்பில் 10ம் வகுப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு


ADDED : ஜூலை 17, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மொபைல் ஆப்பில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகம் 2025–26ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு அவை தேசிய தகவல்தொழில்நுட்ப  மைய உதவியுடன் மொபைல் ஆப்பில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பிறகு, இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில், உள்ள பத்தாம் வகும்பு ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்களின் உண்மை மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிறகு, பதிவிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம்.

மேலும், பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை மொபைல் ஆப்பில் பதிவு செய்யும் முறை தொழிலாளர் துறை இணையதளத்தில், https://labour.py.gov.in, https://ee.py.gov.in கொடுக்கப்படும்.

பத்தாம் வகுப்பு மூப்பை பொறுத்தவரை, அவர்கள் பதியும் தேதியே மூப்பாக கருதப்படும். இந்த மொபைல் ஆப் லிங்கை பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை பதிந்து, அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த ஆப் மூலம் தங்களது பிராந்தியம், பத்தாம் வகுப்பு ஏழு இலக்க எண், பிறந்த தேதி மற்றும் இதர தகவல்களை பதிந்து, தங்களது பதிவு எண்ணை பதிவிறக்கம்  செய்யலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us