ADDED : ஜூலை 17, 2026 06:22 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே தனியார் பள்ளி ஊழியர் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடுத்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுமதி, 43; தனியார் பள்ளி பல்நோக்கு ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு, இரவு 10:00 மணியவில் வீடு திரும்பினர்.
அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிரச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரி உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. அலமாரியில் வைத்திருந்த 7 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழக்கப்பட்டு, சோதனை நடந்தது.
இது குறித்து வில்லியானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
