sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனை  

ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனை  

ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனை  


ADDED : ஜூன் 04, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 05:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி, : புவனகிரி அருகே அருகே ஆலம்பாடியில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை சரி செய்ய, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புவனகிரி அருகே ஆலம்பாடியில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், நத்தமேடு உள்ளிட்ட சுற்றுபகுதிகளை சேர்ந்த கால்நடை விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளி கட்டடம் கட்டுதற்காக கால்நடை மருத்துவமனை இருந்த இடத்தை அப்புறப்படுத்தினர். மாறாக பள்ளி இயங்கி வந்த ஓட்டு கட்டத்திற்கு கால்நடை மருத்துவமனையை இடம் மாற்றினர். தற்போது அந்த கட்டடம் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கால்நடைக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்க ஊழியர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே அப்பகுதி கால்நடை விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறையினர் நேரில் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us