நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் கிராம சபை கூட்டம் உழவர் உதவியகம் வளாகத்தில் நடந்தது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட மடுகரை, ஏம்பலம், கரியமாணிக்கம், பண்டசோழநல்லுார் உள்ளிட்ட 11 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கரியமாணிக்கம் உழவர் உதவியகம் வளாகத்தில் நடந்த ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கி, கூட்டத்தை துவக்கி வைத்தார். இளநிலை பொறியாளர் அய்யப்பன், வருவாய் பிரிவு பொறுப்பு பாஞ்சாலம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரியமாணிக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதேபோல், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.