ADDED : டிச 09, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுார் கிராமத்தில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கரையாம்புத்துார் ஏரி உடைந்த தண்ணீரால், அந்தராஸ்பாளையம், தொட்டி, துளுக்கானந்தம் ஆகியன துண்டிக்கப்பட்டு தீவாக மாறிவிட்டதால், வெளியில் செல்ல முடியவில்லை.
கால்நடைகள் அடித்து செல்லப்பட்டது. விவசாய நிலங்கள் பாழாகியது. சாலை உடைப்பால் 10 கி.மீ., சுற்றி சென்று வருகிறோம். 3 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என, மத்திய குழுவினரிடம் மக்கள் முறையிட்டனர்.