தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏனாம் அணியை வீழ்த்தி தொடர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்த வில்லியனுார் அணி

ஏனாம் அணியை வீழ்த்தி தொடர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்த வில்லியனுார் அணி

ஏனாம் அணியை வீழ்த்தி தொடர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்த வில்லியனுார் அணி


ADDED : ஜூலை 20, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டியில் ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வில்லியனுார் அணி தொடர்ந்த 9வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஸ்ரீராம் கேபிடல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன் கடந்த 7 ம் தேதி துவங்கி சீகேம் மைதானத்தில் நடந்து வருகிறது. அதன் 25வது போட்டி வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி, ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணி மோதியது. 

டாஸ் வென்ற ஏனாம் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அணியின் வேதாந்த் 27 ரன்களும், ஆதித்யா கர்வால் 20 ரன்களும், சோம்ராஜ் பிஷ்னாய் 29 ரன்களும் எடுத்தனர். வில்லியனுார் அணியின் சமர் கான் மற்றும் சாஹித் சஞ்சய் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

பின், 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வில்லியனுார் அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் அமன் கான் 16 பந்துகளில்(6 சிக்சர்கள், 4 பவுண்டரிகள்) 50 ரன்களும், பானு ஆனந்த் 45 பந்துகளில்(9 பவுண்டரிகள்) 59 ரன்கள் எடுத்தனர்.

59 ரன்கள் எடுத்த பானு ஆனந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் ஏனாம் அணி தோல்வி அடைந்ததால், மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us